வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (14/03/2016)

கடைசி தொடர்பு:19:48 (14/03/2016)

கௌதம்- தனுஷ் படத்தின் அதிர்ஷ்டக்கார நாயகி யார்?

   கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்ட கௌதம்மேனன், உடனடியாக தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்.

எனைநோக்கிப்பாயும்தோட்டா என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்திள் படப்பிடிப்பு இன்று தொடங்கியது, சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலையிலுள்ள ஒரு கல்லூரியில் இன்று காலை படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

இன்று தொடங்கி இன்னும் பத்துநாட்கள் முதல்கட்டப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். முதல்கட்டப்படப்பிடிப்பில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாகப் படமாக்கவிருக்கிறார்களாம்.

இந்தப்படத்தில் நாயகியாக மேகாஆகாஷ் என்பவர் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ஜெயராம் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்கும் ஒருபக்கக்கதை படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

கௌதமும் தனுஷூம் இணையும் படத்தில் அவர் நாயகியாகியிருப்பது பல நாயகிகளைப் பொறாமை கொள்ளச் செய்திருக்கிறதாம். 

வீடியோ வடிவில் செய்திக்கு:

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்