புதிய படத்தில் வடிவேலு! விட்ட இடத்தைப் பிடிப்பாரா? | Vadivelu to join hands again with Simbudevan

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (15/03/2016)

கடைசி தொடர்பு:11:00 (15/03/2016)

புதிய படத்தில் வடிவேலு! விட்ட இடத்தைப் பிடிப்பாரா?

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் விளைவு வடிவேலுவுக்குப் படங்கள் இல்லாமல் போனது.

அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது மட்டும் காரணமல்ல, வடிவேலுவின் சம்பளமும் முக்கியக்காரணம் என்று சொல்லப்பட்டது. அவர் கேட்கும் சம்பளத்தை சின்னபடங்களை எடுப்பவர்களால் கொடுக்கமுடியாது, பெரிய கதாநாயகர்கள் படங்களில் அவரை நடிக்க வைக்க யாரும் விரும்பவில்லை. இதனால் படங்கள் இல்லாமலே இருந்தார்.

அதன்பின் அவரே கதாநாயகனாக நடித்து தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் வந்தன. அவை அவருக்குக் கைகொடுக்கவில்லை. அதன்பின்னர் சில படங்களில் அவரை நகைச்சுவை வேடத்தில் நடிக்கக் கேட்டபோது மறுத்துவிட்தாகச் சொல்லப்பட்டது. இப்போது அவர் முதலில் கதாநாயகனாக நடிக்க வைத்த சிம்புதேவனுடன் இணைந்து பணியாற்றப்போவதாகச் சொல்லப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு வெளியான “இம்சைஅரசன் 23ம் புலிகேசி” படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்தப்படத்தின் இரண்டாம்பாகத்தை இப்போது எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எற்கெனவே சிம்புதேவனும் வடிவேலுவும் மீண்டும் இணையப்போகிறார்கள் என்று பேச்சுகள் வந்தன. அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்குக் காரணம், இம்சைஅரசன் படத்துக்குப் பிறகு சந்தானம் மற்றும் கஞ்சாகருப்பு ஆகியோரை நாயகர்களாக வைத்து சிம்புதேவன் படம் இயக்கியதுதான் காரணம் என்பார்கள்.

இப்போது அவற்றை மறந்து இருவரும் இணையவிருக்கிறார்கள் என்றும் இம்முறை நிச்சயம் அது நடக்கும் என்றும் சொல்கிறார்கள். வடிவேலுவின் இந்த அதிரடி முடிவு அவரை மறுபடி முன்னணிக்குக் கொண்டு வரும் என்று பலரும் நம்பிக்கை தெரிவிக்கிறார்களாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்