லாரன்ஸ் உதவிய 128வது அறுவைசிகிச்சை! கண்ணீரில் நன்றி சொன்ன தாய்!

 நடிகர் ராகவா லாரன்ஸ், நிறைய உதவிகள் செய்துவருகிறார்.கடந்த ஆண்டு அக்டோபரில் அவருடைய உதவியினால், ஆறு மாதக் குழந்தை நலமடைந்தது.

 அப்போது, இதுவரை 300 குழந்தைகளுக்கு மேல் அறுவைசிகிச்சை செய்ய உதவி செய்திருக்கிறேன் ஆனால் இந்த புனித் பிறந்து ஆறு மாதத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். ஆனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தை நலமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் லாரன்ஸ் .

இப்போது மீண்டும் ஒரு குழந்தைக்கு அவர் செய்த உதவி பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை 127 இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த லாரன்ஸ், தனது 128வது இருதய அறுவை சிகிச்சையின் உதவியை ஒரு குழந்தைக்கு புரிந்தார்.
 
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அந்த குழந்தையின் முகத்தில் வந்த புன்சிரிப்பினைக் கண்ட அவரது தாயின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியதாம்.
 
இந்தச் செய்தியை தனது டிவிட்டரில் குறிப்பிட்டதோடு தாயின் கையில் இருக்கும் அந்தக்குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படம் வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!