தேர்தல் நேரத்தில் வெளியாகும் காரசாரமான அரசியல் படம்

 ஜெய், சுரபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் புகழ் படம் வருகின்ற மார்ச் 18 அன்று வெளிவர இருக்கிறது இந்தப் படத்தை இயக்குனர் மணிமாறன் அரசியல் சாயம் பூசி எடுத்து உள்ளார் என்றே சொல்லலாம். இந்தப் படத்தின் கரு அரசியலில்  இளையவர்களின் சக்தி எவ்வாறு இருக்கிறது என்பதே ஆகும்.

சமகால இளைஞர்கள் சமுதாய தேவைகளை நோக்கி ஆர்வம் காட்டுவது  மற்றும் நீதியை அடையும்  வரை அயராது தங்கள் குரலை எழுப்புவது இது போன்ற கதை ஓட்டத்துடன் காதல்,மகழ்ச்சி,அதிஷ்டம்  போன்ற மசாலா தூவி அனைவரையும் கவரும் வண்ணம் புகழ் படம் இருக்கும்  என்று சொல்கின்றனர்.
 
தற்போது தமிழகத்தில் தேர்தல் சூடு பிடித்து வருகிறது இந்த நேரத்தில் அரசியலில் இளைஞர்களின்  ஈடுபாடு பெரும்  முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வலுவான கருத்தை புகழ் படம் தாங்கி வருகிறது. அனைவரையும் கவரும் வண்ணம் கமர்சியல் கலந்த அரசியல் படமாக இருக்கும் என புகழ் படக் குழுவினர் கூறியுள்ளனர்.
 
 இயக்குநர்  மணிமாறன் , படத்தைப் பற்றிக் கூறும்போது  ஒரு இளைஞர் பற்றிய  கற்பனைக் கதையே  புகழ், அந்த இளைஞன்  வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள  விளையாட்டு மைதானமே படத்தின் முக்கிய இடம் அந்த விளையாட்டு மைதானமும்  அவரது வாழ்க்கையும்  ஒருங்கிணைந்த படமே "புகழ்".
 
அரசியல் ரீதியான அச்சுறுத்தல்  இளைஞர்களின்  மகிழ்ச்சியை எவ்வாறு கெடுக்கும் என்பதே படத்தின் போக்கு இந்த காரசாரமான அரசியல் பின் புலம் கொண்ட படத்தை ஒரு சிறந்த பொழுது போக்குப் படமாக எடுத்துள்ளேன் என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!