தனுஷ் கெளதம் படத்தில் முக்கியவேடமேற்கும் பாகுபலி நடிகர்

 தனுஷை வைத்து கௌதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.  இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷை தேர்வு செய்துள்ளார் கௌதம் மேனன், இவர் ஒருபக்கக்கதை படத்தில் நாயகியாக நடித்தவர்.

எனை நோக்கி பாயும் தோட்டா’வின் இரண்டாவது நாள் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இரண்டாவது நாள் படப்பிடிப்பில் தெலுங்கு நடிகர் ராணா கலந்துகொண்டிருக்கிறார்.

இப்படத்தின் மற்றொரு முக்கிய கேரக்டருக்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவாரன ராணாவையும் தேர்வு செய்துள்ளார் என்ற தகவல் ஏற்கெனவே இருந்தது. இப்போது அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதன் மூலம் அது உறுதியாகியிருக்கிறது.

இந்தப்படத்தில் அவர் கெளரவத்தோற்றத்தில் மட்டும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மிக முக்கியமான வேடம் என்பதால் ராணாவை நடிக்கக் கேட்டதாகவும் அவர் உடனே ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!