ஏன் இந்தக் கொலைவெறி? கொதிக்கும் கே.வி.ஆனந்த்

ஜீவாவுக்கு படம் இயக்குவதாகக் கூறி கே.வி.ஆனந்த் ஏமாற்றிவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. விஜய் சேதுபதியை வைத்து விரைவில் படமொன்றை இயக்கவிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

அந்தக் கதை ஏற்கனவே ஜீவாவுக்குச் சொல்லப்பட்டு ‘போக்கிரிராஜா’ முடிவுக்குப் பிறகு உங்களை வைத்து தான் படம் இயக்கப் போகிறேன் என கே,வி.ஆனந்த் நம்பிக்கை கொடுத்திருந்தாராம்.

போக்கிரிராஜா எதிர்பார்த்த வரவேற்புகளைப் பெறாத நிலையில் கே.வி.ஆனந்த் இனி ஜீவா வேண்டாம் என முடிவு எடுத்து விஜய் சேதுபதியை இயக்க உள்ளதாகவும்  செய்திகள் வெளியாகின.

அவற்றைப் பார்த்த கே.வி.ஆனந்த்,  டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் கே.விஆனந்த்.

“ ஏங்க?..எதுக்கு இந்த கொலை வெறி? ஜீவாவை நேரா பார்த்து 2 வருஷம் மேல ஆகுதுங்க..@Actorjiiva my most favorite Hero"

 என்று அவர் டிவிட் செய்திருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!