வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (16/03/2016)

கடைசி தொடர்பு:10:55 (16/03/2016)

ரோமியோ ஜுலியட் குழுவுடன் இணையும் தனிஒருவன்

கடந்தஆண்டு வெளியாகி தனிஒருவன் படம் பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு அப்படத்தில் அரவிந்த்சாமியின் வேடமும் ஒரு முக்கிய காரணம். அந்தப்படம் வெளியான பிறகு அரவிந்த்சாமிக்குக் கிடைத்த வரவேற்பும் மிகப்பெரிது.

அதன்பின், பல்வேறு படங்களில் அவரை நடிக்கக்கேட்டு அணுகிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை, இப்போது மீண்டும் ஜெயம்ரவி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஜெயம்ரவி ஹன்சிகா நடித்த ரோமியோஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஜெயம்ரவி நாயகனாகவும் ஹன்சிகா நாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள்.

இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், எடிட்டர் ஆண்டனி, மாஸ்டர் திலீப்சுப்பராயன், வசனகர்த்தா சந்துரு, பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் ஆகியோர் போகன் படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

இந்தப்படத்தில் முக்கியவேடமொன்றில் அரவிந்த்சாமி நடிக்கவிருக்கிறார். படத்தில் அவர் வில்லனா அல்லது இன்னொரு நாயகனா என்பது தெரியவில்லை. இந்தப்படத்துக்கு போகன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18 ம் தேதி பெரம்பூர் பின்னிமில்லில் துவங்குகிறது.

அதற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளனவாம். ரோமியோ ஜூலியட் படத்தில் சூப்பர் ஹிட் பாடல் டண்டணக்கா. அதுபோல போகன் படத்தில் “ டமால் டுமீல் “ என்ற பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்குகிறது.

20 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். வெற்றிப்படமான ரோமியோஜுலியட் குழுவுடன் மாபெரும் வெற்றி பெற்ற தனிஒருவன் அரவிந்த்சாமியும் இணைவதால் இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்