அஞ்சலியுடன் காதல்! ரகசியத்தை உடைத்த ஜெய்!!

உதயம் NH4 படத்தினைத் தொடர்ந்து மணிமாறன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் புகழ். ஜெய், சுரபி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் மார்ச் 18ல் வெளியாகவிருக்கிறது.

இப்படம் பற்றியான சில சுவாரஸ்யங்களை ஜெய் பகிர்ந்துகொண்டார், “அரசியல் சார்ந்த கதைத்தளம் தான் புகழ். ஊரில் ஏதாவது பிரச்னையென்றால் அதில் தலையிட்டு தீர்த்துவைக்கும் இளைஞன் எல்லா ஊரிலும் இருப்பான். அந்தமாதிரியான கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இதனால் எனக்கும், அரசியல் வாதிகளுக்கும் ஏற்படும் பிரச்னையே கதை. 

தொடர்ந்து அஞ்சலிக்கும் உங்களுக்கும் காதல் என்று பேசப்படுகிறதே என்று கேட்டதற்கு சிரித்தவாறு, “ எங்கேயும் எப்போதும் படம் வெளியான நேரத்தில் எனக்கும் அஞ்சலிக்கும் நல்ல புரிதல் இருந்தது. பின்னர் தெலுங்கு படங்களில் அவர் பிஸியாகிவிட்ட நிலையில் நானும் அவரும் அவ்வளவாக பேசிக்கொள்வதில்லை. பின்னர் சில மாதங்களுக்கு முன்பு நானும் அஞ்சலியும் சந்தித்து நம்பரை மாற்றிக்கொண்டோம்.  சில பொது இடங்களுக்கு சேர்ந்தே சென்றோம். எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. அது, பின்னாளில் காதலாக மாறலாம் என்றார் ஜெய்.

காதல் மலர்ந்தால் திருமணம் தானே என்று கேட்டதற்கு,“ திருமணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, இப்போ உள்ள காலத்தில் திருமணமான ஜோடிகள் அதிகமாக விவாகரத்து செய்துகொள்கிறார்கள். காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டால் கல்யாணம் செய்துகொள்ளாமலே சேர்ந்துவாழலாம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!