ரஜினியின் வசதிக்காக டெல்லியில் 2ஓ படப்பிடிப்பு | 2.0 third schedule Shooting starts from tomorrow in Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (16/03/2016)

கடைசி தொடர்பு:11:42 (16/03/2016)

ரஜினியின் வசதிக்காக டெல்லியில் 2ஓ படப்பிடிப்பு

 ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2ஓ படத்தின் இரண்டுகட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துவிட்டன. அடுத்து மூன்றாவதுகட்டப் படப்பிடிப்பு நாளைமுதல் டெல்லியில் தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

 

படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் நிர்வாகி ராஜூமகாலிங்கம் இந்தத்தகவலைத் தெரிவித்திருக்கிறார். தில்லியில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமார் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றனவாம்.

அக்ஷய் நடிக்கவிருக்கும் மொத்தக் காட்சிகளையும் அங்கே படமாக்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இம்மாதம் தில்லியில் நடக்கவிருக்கும் பத்மவிருதுகள் வழங்கும் விழாவில் ரஜினி பத்மவிபூசன் விருது வாங்கவிருக்கிறார்.

அந்த விருதுவிழாவில் அவர் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்பதாலும் தில்லியில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.    

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்