வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (16/03/2016)

கடைசி தொடர்பு:13:38 (16/03/2016)

தற்கொலைகளை மையப்படுத்தி படம் எடுக்கிறார் வெற்றிமாறன்

 லாக்கப் என்கிற நாவலை மையமாக வைத்து விசாரணை படத்தை எடுத்த வெற்றிமாறன் அடுத்து 'ஷூஸ் ஆஃப் த டெட்'  என்ற நாவலை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.  அது விவசாயிகள் பிரச்சினையை மையப்படுத்திய கதை.  

 

வெற்றிமாறன் அடுத்து தனுஷை வைத்து வடசென்னை' படத்தை எடுக்கவிருக்கிறார், அதைத் தொடர்ந்து,. இந்நாவலை தழுவி விவசாயிகள் பிரச்சினையைப் படமாக்க இருக்கிறார்.
 
இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தில் யார்  யார் நடிக்கப்போகிறார்கள் என்பது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. 
 
நடிகர் சாய்பிரசாந்த், நிகழ்ச்சி தொகுப்பாளினி நிரோஷா ஆகியோரின் தற்கொலைகளையொட்டி எல்லோரும் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் விவசாயிகள் தற்கொலை பற்றிய படத்தை எடுக்க முன்வந்திருக்கிறார் வெற்றிமாறன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்