வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (17/03/2016)

கடைசி தொடர்பு:14:05 (17/03/2016)

மாமன் வெயிட்டிங் பாடலுக்காக தீயாய் வேலை செய்யும் சிம்பு - படங்களுடன்

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடிப்பில் ரெடியாகிக் கொண்டிருக்கும் படம் “இதுநம்மஆளு”. இரண்டு பாடல்களைப் படமாக்கி படத்தை வெளியிடத் திட்டமிட்டு தீயாக வேலைசெய்துவருகின்றனர் படக்குழுவினர்.

பாடலுக்காக நயன்தாராவிடம் கேட்டதற்கு வரவேமுடியாது என்று சொல்லிவிட்டதால் வேறொரு முன்னணி நாயகியை வைத்து படமாக்க முயற்சி செய்தார்கள். இறுதியில் தெலுங்கி நாயகியான அடாசர்மாவை வைத்து படப்பிடிப்பை தொடங்கிவிட்டனர்.

சிம்புவுடன் அடாசர்மா குத்தாட்டம் போடும் “ மாமா வெயிட்டிங்” என்ற பாடலைத்தான் செட்டுபோட்டு படமாக்கும் வேளைகளில் பிஸியாக இருக்கின்றனர். தொடர்ந்து இன்னொரு பாடலில் ஆண்ட்ரியா நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த இரு பாடலும் முடிந்தால் படம் தயாராகிவிடும், மே மாதம் தேர்தல் முடிந்த பிறகு  இதுநம்மஆளு திரைக்கு வரும் என்கிறது சினிமா வட்டாரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்