ரஜினிக்குப் பதிலாக ராகவாலாரன்ஸ்?

 இயக்குநர் பி.வாசு இயக்கிய கன்னடப்படம் சிவலிங்கா. அண்மையில் வெளியான இந்தப்படம் சந்திரமுகியின் இரண்டாம்பாகம் போன்று அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எனவே அந்தப்படத்தைத் தமிழில் ரஜினியை வைத்து எடுக்கத் திட்டமிட்டார்களாம். ஆனால் அது நடக்கவில்லை போலும்.

அதற்காக மனந்தளர்ந்துவிடாமல் அடுத்தகட்டத்தை நோக்கி இயக்குநர் பி.வாசு நகர்ந்திருக்கிறாராம். அந்தப்படத்தில் ராகவாலாரன்ஸை நடிக்கவைக்கத் திட்டமிட்டுவிட்டாராம்.

இது தொடர்பான பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள். லாரன்ஸூம் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

லாரன்ஸ் மட்டுமின்றி கதைப்படி இருக்கும் இன்னொரு ஹீரோவாக இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தியையே நடிக்கவைக்கிவிருக்கிறார்களாம்.

அவரே ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவருக்கென சரியான வெற்றிப்படம் இதுவரை அமையவில்லை என்பதால் இந்தப்படத்தில் லாரன்ஸூடன் அவரையும் சேர்த்து நடிக்கவைக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ரஜினி இல்லாத இடத்தை லாரன்ஸை வைத்து நிரப்பப்பார்க்கிறார் பி.வாசு. இப்படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.   

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!