ஐம்பது படங்களில் ஐந்து படங்கள் தான் தேறியதா? ஓர் அதிர்ச்சித் தகவல்!

2016 கால் ஆண்டு முடிவதற்குள் 50 படங்கள் வெளியாகியுள்ளன. இது வெறும் தமிழில் மட்டும் என்பது ஆச்சர்யமான தகவல். இந்நிலையில் 50 படங்களில் தேறிய படங்கள் மற்றும் பிரபலமான படங்கள் எனக் கணக்கிட்டால் 10 கூட முழுமையாகத் தேறவில்லை.

அதிலும் வசூல், மற்றும் வரவேற்புகளுக்காக முறையே நான்கு படங்கள் தான் என்றால் நமக்கு இன்னும் அதிர்ச்சி தான். ஆம் ரஜினிமுருகன், இறுதிச்சுற்று, அரண்மனை 2, விசாரணை,பிச்சைக்காரன் ஆகிய படங்கள் மட்டுமே வசூலித்து தயாரிப்பாளர்களைக் காப்பாற்றிய படங்கள்.

 

பெரிய இயக்குநர்கள், நடிகர்கள் என்ற ரீதியில் பிரபலமாக இருந்த படங்கள் எனக்கொண்டால் கதகளி, தாரை தப்பட்டை, பெங்களூர் நாட்கள், ஜில் ஜங் ஜக் , மிருதன், ஆறாது சினம், சேதுபதி,கணிதன்,போக்கிரி ராஜா மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய பத்து படங்கள் இருப்பினும் இவை எதிர்ப்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்களாகவே உள்ளன. இவற்றில் சில படங்கள் ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றாலும் வசூலில் நிறைவைத் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இப்படியே போனால் வருடத்திற்கு 300 படங்கள் வெளியாகி அதில் முப்பது படங்கள் கூட தேறாமல் போகும் நிலைதான் இருக்கிறது.

எங்கே கோட்டை விடுகிறோம் என திரையுலகினர் சிந்திப்பார்களா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!