பாகுபலிக்கும் ஸ்ரேயாவுக்கும் என்னதான்ப்பா சம்மந்தம்? | I'm not in Bahubali 2 Says Shriya Saran

வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (18/03/2016)

கடைசி தொடர்பு:15:46 (18/03/2016)

பாகுபலிக்கும் ஸ்ரேயாவுக்கும் என்னதான்ப்பா சம்மந்தம்?

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியின் விடையறிய, இந்தியாவே ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. 2017லில் தான் இதற்கான விடை என்று ராஜமௌலி கூறிய பிறகும், மக்களின் ஆவலைத் தூண்டும் வகையில் பாகுபலியை பற்றிய புதிய செய்திகள் தினமும் வந்த வண்ணம் உள்ளன.

அப்படி வந்த செய்தி தான் ஸ்ரேயா சரண் பாகுபலியில், பல்லாலதேவாவின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று. அதாவது ராணா டகுபதியின் மனைவி வேடத்தில். ஆனால் ஸ்ரேயா இதை மறுத்துள்ளார். அண்மையில் தமிழ் சினிமாவில் காணப்படாத ஸ்ரேயா, பாபநாசம் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கனுடன் கௌதமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற அமேசான் இந்தியா பேஷன் வீக்கில் கலந்து கொண்ட இவர், ஆடைவடிவமைப்பாளர் கனிகா சலுஜா வடிவமைத்திருந்த ஆடையில் தோன்றி அசத்தினார். இந்நிகழ்ச்சியின் போது அவரிடம் பாகுபலியில் நடிப்பதாக வந்த செய்தியை பற்றிக் கேட்ட போது, பாகுபலி படக் குழு தரப்பிலிருந்து இதுவரை, இது பற்றி யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக சூரியா, மாதுரி, அமிதாப் என பலரின் பெயர்கள் இதில் அடிபட்ட போதிலும் எதுவும் உறுதி செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் கண்டிப்பாக ராணாவின் மனைவி கதாபாத்திரம் உள்ளபோது, அதில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதைச் சொல்லாமல் படக்குழுவினர் ரகசியம் காத்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்