வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (18/03/2016)

கடைசி தொடர்பு:17:48 (18/03/2016)

மீண்டும் ரஜினிக்குச் செக் வைக்கும் அரசியல் கட்சிகள்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் கை கழுவிய நிலையில் ரஜினிகாந்துடன் கை கோர்க்க பா.ஜ.க திட்டமிட்டு வருகிறது. ரஜினியின் '2.0" படப்பிடிப்பு டெல்லி ஜவஹர்லால் விளையாட்டரங்கில் 35 நாட்கள் நடக்கிறது.

இப்போது சென்னையில் இருக்கும் ரஜினி டெல்லி செல்ல இருக்கிறார். அப்போது மரியாதை நிமித்தமாக நரேந்திரமோடி, அத்வானியை சந்திக்கும் திட்டம் இருக்கிறதாம். அப்போது சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்கச் சொல்லி இருவரும் கோரஸாக வேண்டுகோள் வைக்கப் போகிறார்களாம்.

பாராளுமன்ற தேர்லில் வீடுதேடி வந்தபோதே எஸ்கேப்பான ரஜினி, சட்டமன்ற தேர்தலில் டெல்லி தேடிப்போய் சிக்குவாரா என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. திரும்பவும் அதே கேள்வி எப்போ சார் நீங்க அரசியலுக்கு வருவீங்க? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்