வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (19/03/2016)

கடைசி தொடர்பு:13:11 (19/03/2016)

இந்தப்படத்தையாவது சீக்கிரம் முடிங்க - சிம்புவுக்கு அறிவுரை சொன்ன இயக்குநர்

 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் இதுநம்மஆளு படத்தைத் தொடங்கி சுமார் மூன்றாண்டுகளாகிவிட்டன. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் படம் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது.

நேற்று அதிகாலை அந்தப்படத்தின் பாடல் படப்பிடிப்பு நிறைவடைந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கின்றனர். அந்நிகழ்வு முடிந்த சிறிது நேரத்திலேயே அடுத்தபடத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டார் சிம்பு.

வாலு படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் மைக்கேல்ராயப்பன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்தபடத்தின் தொடக்கவிழா நேற்று நடந்தது.

இதையொட்டிப் பலரும் சிம்பு மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கின்றனர். இதுநம்மஆளு படத்தை இயக்கியிருக்கும் பாண்டிராஜூம் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.

அவருடைய டிவிட்டரில், வாழ்த்துகள், மிக விரைவான படமாகவும் மிகப்பெரிய வெற்றிபடமாகவும் அமையட்டும் என்று சொல்லியிருக்கிறார்.

சிம்புவின் குடும்பமே தயாரித்தும் இதுநம்மஆளு வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டே போனது. இடையில் இயக்குநர் பாண்டிராஜூக்கும் சிம்பு குடும்பத்துக்கும் நிறைய கருத்துவேறுபாடுகளும் ஏற்பட்டன. அதனால் அவருக்கு ஏற்பட்ட காயங்களை மறைத்துக்கொண்டு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் என்றாலும் மிக விரைவான படமாக அமையட்டும் என்கிற வரியில் அவருடைய வலி தெரிகிறதென்று பேசிக்கொள்கிறார்கள்.  

 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்