நாகார்ஜுனாவை பின்பற்றும் கார்த்தி! நெகிழ்ச்சி சம்பவம் | Thozha Movie Function; karthi Says About nagarjuna

வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (19/03/2016)

கடைசி தொடர்பு:18:07 (19/03/2016)

நாகார்ஜுனாவை பின்பற்றும் கார்த்தி! நெகிழ்ச்சி சம்பவம்

நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படம் தோழா. பிரெஞ்ச் படத்தோட ரீமேக்காக தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் இயக்குநர் வம்சி உருவாக்கிவருகிறார்.

இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அவ்விழாவில் கார்த்திபேசும்போது, “ "நாகார்ஜுனா அமெரிக்காவில் படித்தவர், நானும் அங்குதான் படித்தேன். இரண்டு பேருமே என்ஜினீயரிங், அவரைப் போலவே நானும் சினிமாவில்தான் நடிக்க வந்தேன். சில சமயங்களில் நான் செய்வது சரியா எனத் தோன்றும்போதெல்லாம் நாகார்ஜுனா சாரை தான் நினைத்துக்கொள்வேன்.

அவரின் வாழ்க்கையைப் போலவே என் வாழ்க்கையும் அமைகிறதென்றே சிலசமயங்களில் நினைத்துக்கொள்வேன். அதனால் தான் என்னென்ன செய்யவேண்டுமென்று அவரைப் பின்பற்றியே கற்றுக்கொண்டேன்.

இப்போ சேர்ந்தே நடித்துவிட்டோம், இந்தப் படத்தில் நாங்க ஹீரோக்கள் இல்லை, நல்ல நண்பர்கள். ஒரு திருடனுக்கும், பணக்காரருக்கும் இடையே எப்படி நட்பு வர முடியும்? அந்த நட்பின் கதையே தோழா.” என்று நாகார்ஜுனாவை நெகிழ்ச்சியுடன் பார்த்தவாறு நிகழ்ச்சியில் இவ்வாறு கார்த்தி பகிர்ந்துகொண்டார்.

தோழா செய்தியாளர் சந்திப்பு முழுமையான வீடியோ பதிவிற்கு:  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்