Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓமைகாட் அஜித்துக்கு ஆர்டரா? இந்த வார ஃப்ளாஷ்பேக்! #WeeklyViral

இதோ பரபரப்பாக ஒரு வாரத்தைக் கடந்து விட்டோம். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் இந்த வாரம் சினிமா உலகம் அதீத ட்ராஜடிகளைக் கடந்துள்ளது. என்னென்ன அவையெல்லாம் என்பதே இந்த வார “வீக்லி வைரல்”

முழுமையான வரவேற்பு ஆல்பத்திற்கு:https://www.vikatan.com/cinema/album.php?&a_id=5352 

 சன் டிவி புகழ் அஞ்சனா, மற்றும் கயல் படம் நாயகன் சந்திரன் இருவருக்கும் திருமணம் கோலாகலமாக முடிந்து வரவேற்பில் விஜய் வந்து அசத்திவிட்டுச் செல்ல அனைவரும் ’தளபதிடா!!’ என்று அடடே சொன்னார்கள்.

இந்த வாரத்தின் பேரிடியாக சாய் பிரசாந்தின் தற்கொலை. தனது மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சாய் பிரசாந்த் இரண்டு பக்கக் கடிதம் இணையம் முழுக்க பரவி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

என்னப்பா  இப்படி ஆய்டுச்சே என்று கலாபவன் மணியின் இறப்பையே நம்மால் ஜீரணிக்க முடியாமல் இருந்த வேளையில் அவர் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு உடலில் பூச்சி மருந்து இருப்பது தெரிந்து மூவர்  கஸ்டடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சாய் பிரசாத் மரண சோகம் முடிவதற்குள் ஆந்திராவின் ஜெமினி டிவி நிரோஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி இந்த வாரம் முழுக்க முழுக்க சினிமா உலகம் சோகமான நிலைக்கே அதிகம் தள்ளப்பட்டுள்ளது.

அஜித் கண்டிப்பாக நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது நடிகர் சங்கம். வருவாரா வரமாட்டாரா என அஜித் ரசிகர்கள் முதல் சினிமா ரசிகர்கள் வரை வெயிட்டிங் ஃபார் தல எண்ட்ரி மொமெண்டில் இருக்கிறார்கள்!!

ரஜினி நடிப்பார் என காத்திருந்த பி.வாசுவின் கன்னடப்படம் சிவலிங்காவில் அவருக்குப் பதில் ராகாவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். கிட்டத்தட்ட படம் சந்திரமுகி பார்ட் 2 பாணியில் இருக்கிறதாம்.. ரா ரா பாட்டு இருக்குமா?

2.ஓ பட ஷூட்டிங்கிற்காக டெல்லி செல்லவிருக்கிறார் ரஜினி அப்படியே மரியாதை நிமித்தமாக மோடி மற்றும் அத்வானியை சந்திக்கிறாராம். இது அரசியல் சந்திப்பா, அல்லது நட்பு சந்திப்பா என்பது இந்த வார கேள்வி எனில் அடுத்த வாரம் பதில் கிடைக்குமா? அரசியலுக்கு எப்போ வருவீங்கஜி!!

விஜய்யின் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலாமாக மார்ச் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிப்பு வெளியாக பாட்டுக்காக மரண வெயிட்டிங் என இசைப் பிரியர்களும் , விஜய் பிரியர்களும் காத்திருக்கிறார்கள்.ஜித்து ஜில்லாடி பக்கா கில்லாடி பாட்ட டவுன்லோடு பண்ணனும்!!

பிகினிக்கு மட்டும் ஒரு கோடி, மொத்தமா படத்துல நடிக்க நான்கு கோடி என சிரஞ்சீவியின் 150வது படத்திற்கு சம்பளமாக கேட்டு நம்ம நயன் டார்லிங் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளார். நீ கலக்குச் செல்லம்!!

த்ரிஷாவின் நாயகி டீஸர், தோனி அண்டோல்ட் ஸ்டோரி படத்தின் டீஸர் என தமிழ் சினிமா, விளையாட்டு வாசிகளுக்கு விருந்து என்றால் தெலுங்கில் பவன் கல்யாணின் சர்தார் கப்பர் சிங் டீஸர் பட்டையைக் கிளப்பியது, எக்ஸ் மேன் டிரெய்லர், மலையாளத்தில் துல்கர் சல்மானின் கலி பட டிரெய்லர் என இவைகளும் வைரலோ வைரலானது. தொடர்ச்சியாக நிவின் பாலியின் ஜேக்கபிண்டே ஸ்வர்கராஜ்யம் டீஸரும் முட்டிக்கொள்ள எது வைரலில் நம்பர் ஒன் என போட்டிக் கலைகட்டியுள்ளது.தெறிக்கு முன்னாடி தெறிக்கவிட்ருவீங்களா? முடியுமா?

நாயகி டீஸருக்கு: https://www.vikatan.com/cinema/video.php?&a_id=7770  

புகழ், ஆகம், சவாரி, விடாயுதம் என நான்கு படங்கள் இந்த வார வெள்ளித் திரையை அலங்கரித்து புகழ் கொஞ்சம் ஓகே ரகமாகி வீக் எண்டை முடித்து வைத்துள்ளது...நாங்க தேர்தல்ல ஜெயிச்சா பைக் குடுப்போம் மொமெண்ட்! 

மற்ற மொழிப் பட ப்ரியர்களுக்காக, மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் “ட்ராவின்டே பரிணாமம்” படமும், ஹிந்தியில் அலியாபட் நடித்த “கபூர் அன்ட் சன்ஸ்” படமும் ரிலீஸாகியிருக்கிறது. 

தோழா பிரஸ் மீட். 'இந்தப் படம் என் வாழ்வை மாற்றும்' என தெலுங்கு ஸ்டைலிஷ் மன்னன் நாகார்ஜுனா உணர்ச்சிவசப்பட 'அடடா படத்தை பார்த்தே ஆகணுமோ!'ன்னு இந்தவாரமே அடுத்த வாரம் குறித்து சிந்திக்க வைத்துவிட்டார்கள் சினிமா வாசிகள்!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்