வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (21/03/2016)

கடைசி தொடர்பு:11:06 (22/03/2016)

விஜய் சொன்ன குட்டிக்கதை - தெறியில் ப்ரீ அட்வைஸ்

எங்கு திரும்பினாலும் விஜய்ரசிகர்களின் ஆரவாரத்துடன் திருவிழா போல,  நடந்துமுடிந்தது தெறி படத்திற்கான இசைவெளியீட்டு விழா.

தெறி பாடலும், டிரெய்லரும் நேற்று அரங்கில் திரையிடப்பட்ட ஒவ்வொரு கணமும் ரசிகர்களின் சத்தம் திரையரங்கைத்தாண்டி ஒலித்தது. விஜய்யின் பேச்சைக் கேட்கக் கூடியிருந்த ரசிகர்களுக்கான தருணம் இறுதியில் அமைந்தது.

இவ்விழாவில் விஜய் பேசிய முழுமையான தொகுப்பு இங்கே,

“ இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் தான் ஹீரோவாக இருப்பாங்க, ஆனா ஹீரோவே இசையமைப்பாளரா இருக்குறது இந்தப் படத்துல தான், அவர் தான் பல வெர்ஜின் பசங்களின் தலைவர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர்களின் ஹீரோ, உதிரிப்பூக்கள் மாதிரியான உதிராத பூக்களைக் கொடுத்த மகேந்திரன் சார், இவர்களுடன் வேலைசெய்ததே பெருமையா இருக்கிறது” 

“புலி வேட்டையாடும்போது, மான் கூட்டத்திலிருந்து ஒரு மானை மட்டும் பிரிச்சி வேட்டையாடும், அந்த மான் தான் வெற்றி. அந்த புலி பெயர் தான் கலைப்புலி!

அதுமாதிரி,
இயக்குநர் அட்லீ, ராஜா ராணி மாதிரி ஒரு காதல் படத்தை எடுத்துட்டு, என்ன வச்சி ஆக்‌ஷன் படமெடுக்கணும்ங்ற வெறி தான் இந்த தெறி.

ரசிகர்களுக்காக ஒரு குட்டிக் கதை!

“ ரஷ்ய முன்னாள் அதிபர் மாவோ சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு சின்ன பையன் தலைவர்கள் படத்தை வைத்து விற்றுக்கொண்டிருக்கிறான். அந்தப் பையன் வச்சிருந்த எல்லாப் படமும் மாவோ படமாகவே இருந்துச்சி, உடனே மாவோ, கர்வத்தோட அந்த சின்னப் பையனைக் கூப்பிட்டு, “ என்ன தான் என் மேல பாசம் இருந்தாலும், மற்ற தலைவர்களோட படத்தையும் சேர்த்து விக்கணும்”னு சொல்லிருக்காரு, உடனே அந்தப் பையன் சொல்லிருக்கான், மற்ற தலைவர்கள் படமெல்லாம் வித்துப்போயிடுச்சி, உங்க படம் தான் இன்னும் விக்கலை” - நீங்களும் கர்வமில்லாம இருந்தா மட்டும் தான் பெரிய உயரத்தை அடையமுடியும்.

அடுத்தவங்க தொட்ட உயரத்தை உங்க இலக்கா வச்சிக்காம, நீங்க தொட்ட உயரத்தை அடுத்தவங்களுக்கு இலக்கா வைக்கணும். உங்களைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சில விஷயங்களை பகிர்ந்துக்கணும்னு ஒரு ஆசை தான். போரடிச்சா விட்டுருங்க, ஸ்பார்க் அடிச்சா ஏத்துக்குங்க. ஃப்ரீ அட்வைஸ்!!

நீங்க இருட்டுல படம் பார்க்குறதுனால தான் நாங்க இப்போ வெளிச்சத்துல இருக்குறோம். தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனா வெற்றிக்கு ஆயிரம் தோல்வி தான் காரணம்.

கடைசியா, போலீஸுக்கு அக்யூஸ்ட கண்டா ரொம்பப் பிடிக்கும், இந்த தெறி போலீஸ அந்த அக்யூஸ்டுக்கு கூட பிடிக்கும். ” இவ்வாறு விஜய் பேசி முடிக்க, விஜய் ரசிகர்களால் அரங்கமே அதிர்ந்தது.

ஆனாலும் விஜய் சொன்ன குட்டிக் கதையில் ரஷ்ய முன்னாள் அதிபர் மாவோ என்று குறிப்பிட்டிருந்தார், அது சீனா முன்னாள் அதிபர் மாவோ என்பது மட்டும் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விழைகிறேன். இந்த சின்ன தவறை சுட்டிக்காட்டி இணையத்தில் கலாய்ப்பதை விட்டுவிட்டு அவர் கூறிய சிந்தனையை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள் மக்களே!

 தொடர்புடைய பதிவுகள்:-

‘கெட்டபய சார் இந்த அட்லி’ - இயக்குநர் மகேந்திரன் புகழாரம்

‘தெறி’ படம் சொல்லும் கதை என்ன? - இயக்குநர் அட்லி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்