கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதியும் டி.ராஜேந்தரும் நடிக்கிறார்கள்

 தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம்  அந்தப்படம் சரியாகப் போகவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் 'அனேகன்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் கதை மற்றும் நடிகர்கள் விசயத்தில் மிகவும் கவனமாக இருந்தார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

அவருடைய அடுத்த படத்தில் நாயகனாக ஆர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக ஒன்றன்பின் ஒன்றாகச்  செய்திகள் வந்தன.  அவை எதுவும் நடக்கவில்லை.  
 
கடைசியாக அவர் விஜய் சேதுபதியை இயக்க இருக்கிறார்  என்று சொல்லப்பட்டது. அது இப்போது உறுதியாகியிருக்கிறது.
 
பல பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விஜய்சேதுபதி மட்டுமின்றி படத்தில் டி.ராஜேந்தரும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
 
டி.ராஜேந்தர் சாரோடும் விஜய்சேதுபதியோடும் பணியாற்ற மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருப்பதாக கே.வி.ஆனந்த் சொல்கிறார்.

இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் வழங்கும், ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!