வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (22/03/2016)

கடைசி தொடர்பு:13:29 (22/03/2016)

அமெரிக்காவில் ரஜினிக்கு அடுத்து விஜய்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் ஆடியோ  மற்றும் டிரைலரும் வெளியிடப்பட்டது. பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனால் இப்படத்தின் வியாபாரமும் தற்போது அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியான மறுநாளே இந்த படத்தின் அமெரிக்கா வெளியீட்டு உரிமையை சினி கேலக்சி என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. ‘தெறி’ படத்தை அமெரிக்காவில் வெளியிட ரூ.3 கோடி கொடுத்து உரிமையைப் பெற்றுள்ளது.

‘தெறி’ மட்டுமல்லாது, ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘24’ ஆகிய படங்களின் அமெரிக்க வெளியீட்டு உரிமையையும் இந்த நிறுவனம்தான் பெற்றுள்ளது.

‘கபாலி’ படத்தை அமெரிக்காவில் வெளியிட ரூ.8.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. அதேபோல், ‘24’ படத்தை ரூ.2.1 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் படத்துக்குத்தான் அங்கு அதிக அளவில் வியாபாரமாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிறுவனம் ஏற்கெனவே, கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’ படத்தை  ரூ.2.8 கோடிக்கு வாங்கி அமெரிக்காவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்