தெறி பாடல்விழாவில் நடந்த தவறு - வருத்தம் தெரிவித்தார் விஜய் | Vijay Says Sorry For saying Wrong Story!

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (22/03/2016)

கடைசி தொடர்பு:16:14 (22/03/2016)

தெறி பாடல்விழாவில் நடந்த தவறு - வருத்தம் தெரிவித்தார் விஜய்

தெறி பட  இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தன்னுடைய பேச்சுக்கு இடையே இரண்டு குட்டிக் கதைகளை ரசிகர்களுக்கு கூறினார்.

அதில் ஒன்று,  ஒரு நாள் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியான மாவோ, சாலையில் போகும்போது ரோட்டோரமாக ஒரு சிறுவன் அவருடைய போஸ்டர்களை வைத்து விற்பனை செய்வதைப் பார்த்தார். அந்தச் சிறுவனின் அருகில் சென்று பார்த்தபோது, அங்கேயிருந்த அனைத்து போஸ்டர்களுமே தன்னுடையதுதான் என்று தெரிந்து கொண்டார்.

அந்தச் சிறுவனிடம், ‘இனிமேல் என் போஸ்டரை மட்டும் போடாதப்பா.. மத்த தலைவர்களின் போஸ்டர்களையும் போட்டு விற்பனை செய்யுப்பா..’ என்றார். அதற்கு அந்தச் சிறுவன்.. ‘மத்தவங்க போஸ்டரெல்லாம் வித்திருச்சு.. இதுதான் விக்காதது..’ என்றானாம்.

எனவேதான் சொல்றேன்.. வாழ்க்கைல கர்வப்படவே கூடாது.”  என   மாவோவை  ரஷ்ய தலைவர் என்று  கதையில்  நடிகர் விஜய் ஒரு கதையைக் குறிப்பிட்டார். ஆனால் மாவோ உண்மையில் சீனாவின் தலைவர்.

மாவோ’ எனும் மாசேதுங் நவீன சீனாவை வடிவமைத்ததும்,   கம்யூனிஸத்தின் கீழ் சீனப் பேரரசை நிறுவியதும் இவரே. சீனாவின் முதல் கம்யூனிஸ்ட் ஜனாதிபதியாக திகழ்ந்தவர். தான் சாகின்றவரையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கியவர். இப்போதும் உலகம் தழுவிய பொதுவுடமை பேசும் அனைத்து வகையான கம்யூனிஸ்ட்களுக்கும், இப்போது உலகப்பொது உடமை சித்தாந்தங்கள் பேசுகிறவர்கள் மாவோவை பற்றி குறிப்பிடாமல் பேச முடியாது. அந்தளவுக்கு மக்களுக்காக உழைத்த தலைவர்.

இப்படிப்பட்டவரை விஜய் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு, தற்போது இணையதளங்களில் மிகவும் வைரலாகி நிற்கிறது. விஜய்யின் பேச்சைக் குறிப்பிடும் நெட்டிசன்கள்,   கமெண்டுகளை அள்ளிவீசிவருகிறார்கள். இதை பார்த்த  விஜய்யின்  நெருங்கிய நண்பர்கள், அவரின் பேச்சில் இருந்த தவறு குறித்து விஜய்யிடம் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த விஜய் தரப்பு,  நெட்டிசன்கள்  "சுட்டிக்காட்டப்பட்ட தவறை விஜய் அறிந்தார். கதை சொல்லும்போது பெயரைத் தவறாக சொன்னதற்காக வருத்தம் தெரிவித்ததோடு,  தனது ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லும்போது, தெரியாமல் நடந்த தவறு அது. மேடையில் பேசும்போது அத்தகைய தவறுகள் எல்லோருக்கும் வருவதுண்டு.  இனி கவனத்துடன் இருப்பதாகச் தனது விளக்கத்தில் விஜய் கூறியுள்ளார்.

சி.ஆனந்தகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்