வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (22/03/2016)

கடைசி தொடர்பு:17:23 (22/03/2016)

இளையராஜாவின் 1001வது படம் எது?

இளையராஜா, இசை அமைத்த ஆயிரமாவது படம் எது என்பதில் குழப்பம் இருந்தது. பால்கி இயக்கிய ஷமிதாப்பா, பாலா இயக்கிய தாரை தப்பட்டையா என்பது தான் அந்த குழப்பம்.

பால்கி, ஷமிதாப்தான் ஆயிரமாவது படம் என்று கூறி மும்பையில் இளையராஜாவுக்கு விழா நடத்தினார். ஆனால் கணக்குப்படி தாரை தப்பட்டை தான் ஆயிரமாவது படம் என்று இளையராஜாவே தெரிவித்து விட்டதால் அது ஆயிரமாவது படம் என்பது உறுதியானது.

தற்போது இளையராஜா இசை அமைத்துள்ள பல படங்கள் வெளிவரத் தயாராக இருக்கிறது. அதில் பால்கி இயக்கி உள்ள இந்திப்படமான கி அண்ட்கா குப்பி, ரமேஷ் இயக்கி உள்ள ஒரு மெல்லிய கோடு, புதுமுகங்கள் உருவாக்கி உள்ள ஓய், முத்துராமலிங்கம் மற்றும் கிடா பூசாரி மகுடி, இந்த படங்கள் அனைத்தும் இளையராஜாவில் 1001வது படம் என்று விளம்பரம் செய்து வருகிறது. எந்த படம் முதலில் வெளிவருகிறதோ, அது தான் இளையராஜாவின் 1001வது படம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்