ரஜினிக்கு 6-வது இடம்!

சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் இணையதளம் நேற்று தன்னுடைய 10வது ஆண்டை நிறைவு செய்தது. ஃபேஸ்புக் இணையதளத்துக்குப்பிறகு மக்களின் பயன்பாட்டில் டிவிட்டர் சமூக வலைதளம் அதிக பயனாளர்களைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக செலிபிரிட்டி என அழைக்கப்படும் பிரபலங்கள் பலரும் டிவிட்டர் இணையதளத்தைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த், ஜெயம்ரவி, சந்தானம்,  வடிவேலு, த்ரிஷா, சமந்தா, ஹன்சிகா என முன்னணியில் உள்ள பலரும் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.

அதில் ரஜினி, டிவிட்டர் கணக்கு ஆரம்பித்த மே 5-ம் தேதியன்று 24 மணிநேரத்திற்குள் 2 லட்சம் பின்தொடர்பாளர்களைப் பெற்று. தனி சாதனை படைத்துள்ளார். தற்போது 30 லட்சம் பேர் உள்ளனர். நேற்று டிவிட்டர் இணையதளம் டிவிட்டரின் மறக்க முடியாத சிறந்த பத்து தருணங்களை வரிசைப்படுத்தி அதில் ரஜினிக்கு 6-வது இடத்தை கொடுத்துள்ளது.

ரஜினி டிவிட்டரில் ஒரே நாளில் சாதனை படைத்திருந்தாலும் ஏ.ஆர்.ரகுமானை இதுவரை 1 கோடிக்கு மேற்பட்டோர் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை டிவிட்டர் இணையதளம் குறிப்பிட மறந்துவிட்டது. டிவிட்டர் தொடர்பாளர்களின் சாதனையைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் ஏ.ஆர்.ரகுமான்  முதலிடத்தில் உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!