வெளியிடப்பட்ட நேரம்: 10:11 (23/03/2016)

கடைசி தொடர்பு:10:36 (23/03/2016)

வின்னரான ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் - ரன்னர் ஃபரிதா என்ன சொல்கிறார்

தமிழ்நாட்டின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் தற்போது கொஞ்சம் பிரச்னைகளை சந்தித்துள்ளது. ஆனந்த் ஏற்கனவே சினிமாக்களில் பாடிய பாடகர் என்றும் அவர் மலையாளத்திலேயே பல இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்களைக் கடந்துவந்தவர் என சர்ச்சைகளைக் கிளப்ப இதில் பாதிக்கப்படுவது பார்வையாளர்களா, அல்லது மார்க் போட்ட ஜட்ஜ்களா என விவாதிப்பதை விட உண்மையில் பாதிப்பு போட்டியாளர்களுக்குத் தான் இருக்கும்,

இந்நிலையில் முதலிடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபரிதாவிடம் பேசியபோது, எனக்கு வெற்றிக் கிடைக்கலங்கற வருத்தம் இருக்கு. ஆனா நீங்க சொல்ற மாதிரி அவரு ஒரு பின்னணிப் பாடகர்ங்கறது எங்களுக்கு முதல் சில சுற்றுகள்லயே தெரியும். ஆனால் ஒரு விஷயம் நாங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும். ஜூனியர்கள்ல வேணும்னா சூப்பர் சிங்கர் மேடை புதுசா இருக்கலாம். ஆனா சீனியர் லெவல் போகும் போது கண்டிப்பா பலரும் பல மேடைகள், மைக்குகள பாத்துட்டுதான் வந்துருப்போம். ஏன் நானே பல கச்சேரிகள்ல பாடினவ தான். ராஜகணபதி ஃபர்ஸ்ட் ஸ்டேண்டட்ல இருந்து மியூசிக் கத்துக்கறாரு எல்லாரும் நேரடியா வந்து சூப்பர் சிங்கர் மேடையில தான் ஏறணும்னா வாழ்க்கைல அதத் தாண்டிப் போக முடியாதே.

என்னப் பொருத்த வரைக்கும் என்னோட பெஸ்ட் குடுத்தேன். ஆனா அவரு ஏற்கனவே பின்னணிப் பாடகர்ங்கறதுனால எனக்கு முதலிடம் கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. ஆனா வெற்றி எங்க எப்படி யாருக்கு எழுதியிருக்குன்னு இருக்கே. ஆனால் ஒரு விஷயம் என் ஏரியாவைத் தாண்டினாலே பல பேருக்கு என்னைத் தெரியாது, ஆனால் இப்போ யார் யாரோ எங்கேயோவெல்லாம் எனக்கு ஹாய் சொல்றாங்க. என் குழந்தைகள் வாழ்க்கைய இனி பார்க்கணும், எனக்கு கொஞ்சம் கஷ்டம் தான், எல்லாம் நன்மைக்கே...என்றார் ஃபரிதா.

ராஜகணபதி , +2 பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவர். அவரிடம் கேட்டபோது, ப்ளீஸ்ங்க எதுவாக இருந்தாலும் விஜய் டிவி ஹெல்ப்லைன் அல்லது அங்க இருக்கவங்கள்ட்ட கேளுங்க. உங்களுக்குப் பதில் சொல்லாம இருக்கக் கூடாதேன்னு தான் நான் பேசினேன். இது சம்மந்தமா நான் பதில் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்.

 இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என நாம் நினைத்தாலும் இன்று இவர்களை கோடான கோடி மக்களுக்குத் தெரியும். அந்த வகையில் டிவி இவர்களுக்கு நன்மையே செய்துள்ளது எனலாம்.

- ஷாலினி நியூட்டன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்