2.0 படப்பிடிப்பில் சண்டை போடும் எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம் படத்துக்காக தமிழ்ப் படஉலகில் காலடி பதித்த லண்டன் நடிகை எமிஜாக்சன், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இதனால் தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி என பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.

தற்போது ஷங்கரின் '2.0' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் எமிக்கு முக்கிய ஆக்சன் ரோல். கதைப்படி டாம்ப் ரைடர் வீடியோ கேமில் வரும் லாரா கிரப்ட் என்கிற கதாபாத்திரத்தைத் தழுவி இவரது வேடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதோடு சேஸிங் காட்சிகளில் நடித்துள்ள எமிஜாக்சனுக்கு ஒரு சண்டைக் காட்சியும் உள்ளது.

அதில் ஹாலிவுட் படம் போல பறந்து பறந்து அந்தரத்தில் சண்டை போடப் போகிறார் எமி. இதற்கான ஒத்திகை ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.

தற்போது டில்லியில் ரஜினி-&அக்சய்குமார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு பிறகு எமி, சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

எஸ். மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!