வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (23/03/2016)

கடைசி தொடர்பு:13:51 (23/03/2016)

ஆபாச படங்கள் பரப்புவோருக்கு நடிகை பதிலடி!

இதோ மீண்டும் நடிகைகளை வைத்து போட்டோஷாப் செய்த ஆபாச புகைப்படங்கள் பிரச்னை ஆரம்பித்துவிட்டன. கேரள நடிகை ஜோதி கிருஷ்ணாவின் ஆபாசப் படங்கள் என இணையத்தில் பரவி வருகிறது, இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஜோதி கிருஷ்ணா,

அதில் ’ஒரு கேவலமான குடும்பத்தில் பிறந்த மகனோ, மகளோ தங்களது தாயின் அல்லது சகோதரியின் உடல் உறுப்புகளின் மீது எனது முகத்தை வைத்து மார்பிங் செய்து வாட்ஸ் அப் மூலம் வெளியிட்டுள்ளார். இது பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது. என்னைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் பலர், இவ்விவகாரத்தில் எனக்கு ஆதரவாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

எனவே, எனது முகத்துடன் கூடிய மார்பிங் படங்களை வெளியிட்டவர்கள் தனது முயற்சியில் வெற்றி பெறவில்லை என்பதையே எனக்குவரும் ஆறுதல் செய்திகள் காட்டுகின்றன. எனவே, இதுதொடர்பாக நான் தனியாக விளக்கம் எதுவும் அளிக்க விரும்பவில்லை. எனக்கு பக்கத்துணையாகவும், ஆதரவாகவும் ஆறுதல் செய்திகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோதி கிருஷ்ணா பதிவிட்டுள்ளார்.

இவர் சொல்லிவிட்டார்.இவரைப் போலவே பல நடிகைகள் விதவிதமாக கண்டனம் சொல்லியாகிவிட்டது எனினும் திருந்துவார்களா இந்த இணைய விஷமிகள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்