விஜயகாந்த் தர்மன் அல்ல காமெடியன்; பாஞ்சாலி யார்? விளாசும் அதிமுக நடிகர் -

மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சேர்ந்ததையடுத்து, மக்கள் நலக்கூட்டணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்றும் பாண்டவர் அணி என்றும் அழைக்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதோடு இந்த அணியில் உள்ள விஜயகாந்த்தை, தர்மன் என்றும், வைகோவை அர்ஜூனன், திருமாவளவனை பீமன் என்றும், ஜி.ராமகிருஷ்ணனை நகுலன் என்றும், முத்தரசனை சகாதேவன் என்றும் அறிவித்தனர். இதற்கு அ.தி.மு.கவை சேர்ந்த நடிகர் விஜய்கார்த்திக் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

அவர் கூறுகையில், "பாண்டவர் அணி என்று நடிகர் சங்கத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த அணி வெற்றி பெற்றது. ஆனால் அது அரசியலில் சாத்தியமல்ல. வைகோவை அர்ஜூனன் என்று சொல்வது சரி. மற்றவர்களுக்கு இந்த கேரக்டர் பொருந்தாது. திருமாவளவனை பீமன் என்று சொல்லி இருக்கிறார்கள். பீமன் என்றால் பலசாலி என்றும் சோம்பேறி என்றும் சொல்வார்கள்.

இதுபோல விஜயகாந்த்துக்கும், ராமகிருஷ்ணனுக்கும், முத்தரசனுக்கும் அந்த கேரக்டர் கண்டிப்பாக பொருந்தாது. அரசியல் சாதகப்படி வைகோ இருக்கும் அணி அவ்வளவு தான். விஜயகாந்துக்கு காமெடி கேரக்டர் கொடுத்து இருக்கலாம். பாஞ்சாலி கேரக்டர் அக்கா தான்.

நம்ம பிஜேபி.... தமிழிசை. அவர்கள் அணியில் என்று சொன்னால் பாஞ்சாலி பிரேமலதா தான். சகுனி என்றால் பிஜேபி. மக்கள் நலக்கூட்டணியின் பெயரை மாற்றியதே அந்த அணி மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது. விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளார்கள். அவரை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளின் பெயரை நிதானமாகச் சொல்லச்சொல்லுங்கள். அவரால் சொல்ல முடியுமா" என்றார்.

எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!