வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (23/03/2016)

கடைசி தொடர்பு:18:35 (23/03/2016)

”குக்கூ” ராஜுமுருகனின் அடுத்த படைப்பு ” ஜோக்கர்”!

 குக்கூ இயக்குநர் ராஜுமுருகன், தனது அடுத்தப்பட வேலைகளை இனிதே முடித்துவிட்டார். படத்திற்குத் தலைப்பு ஜோக்கர் என வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகரும், நடிப்பு வாத்தியாருமாக ஜிகர்தண்டா, ஆரண்ய காண்டம் படங்கள்  மூலம் அறியப்பட்ட சோமு கழிவறையை சோகமாக பார்த்துக்கொண்டிருப்பது போல் இருக்கும் போஸ்டரே படம் வித்யாசமான படம் மற்றும் சமூகத்திற்கு ஏதோ சொல்லவிருக்கும் கதை என்பதையும் நேரடியாகவே உணர்த்துகிறது.

 

ராஜுமுருகன் இயக்கத்தில்,  ஹீரோவாக சோமசுந்தரம், மற்றும் நாயகிகளாக புதுமுகங்கள் காயத்ரி,  ரம்யா நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ட்ரீம் வாரியர் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. 

படத்தின் இறுதிக்கட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்