’தெறி’யைப் பாராட்டிய ‘கபாலி’!

தெறி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு ரஜினி போன் செய்து, தெறி படம் பற்றி புகழ்ந்த உரையாடல் இங்கே,

"தாணு.. தெறி ட்ரெய்லர் பார்த்தேன்! எக்ஸாட்னரி, ஃபென்டாஸ்டிக்.. குட் குட்.." 

  தாணு பவ்யமாக,  “நான் எடுக்கல சார்.. அட்லிதான் எடுத்து இருக்கார்”

“இட்ஸ் ஒ.கே இருந்தாலும் காட்சிகள்லாம் அவ்ளோ ரிச்சா இருக்கறதுக்கு எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்னு எனக்குத் தெரியும்”

 - என்று சிரித்தபடியே சொன்னாராம்.

தெறி டிரெய்லர் வெளியானதிலிருந்து நிறையப் பாராட்டுகள் வந்து கொண்டிருக்கிறதாம். இப்போது சூப்பர் ஸ்டாரிடமிருந்து வந்த பாராட்டு தெறி படக்குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ரஜினியை வைத்து கபாலி படத்தையும் தாணு தான் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!