வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (24/03/2016)

கடைசி தொடர்பு:13:47 (24/03/2016)

நட்சத்திர கிரிக்கெட்டில் இணையும் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக வரும் ஏப்ரல்மாதம் 17ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் நடிகர்களின் அணிகளுக்கு நயன்தாரா,அனுஷ்கா,திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்தப் போட்டியைக் காண திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதில் நடிகர், நடிகைகளும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல தமிழ் அல்லாத பிறமொழி நடிகர்களும் அழைக்கப்பட்டு உள்ளனர். ஹிந்தி திரைப்பட உலக சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இதில் கலந்துகொள்கிறார்கள்.

தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதில் கலந்து கொண்டு முதல் பந்தை வீசி போட்டியைத் தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு அணி சார்பில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் 8 அணிகள் மோதுகின்றன. அணிக்கு 6 நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் எல்லா அணிகளுக்கும் சேர்த்து 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் 6 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. காலை 10 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இந்தப் போட்டி நடைபெறும். சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ், ஜீவா, விஷ்ணு உள்ளிட்ட 8 பேர் அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்படவுள்ளனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கதாநாயகி தூதுவராக இருப்பார். நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட கதாநாயகிகள் தூதுவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்