சரிகமே பதநிசே என்று இளசுகளின் பேவரைட் படமாக பாய்ஸ், 2003ல் வெளியானது. மீண்டும் பாய்ஸ் டீம் 13 வருடங்கள் கழித்து இணையவிருக்கிறது.
சங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் நடித்த சித்தார்த், பரத், நகுல், ஜெனிலியா மற்றும் தமன் ஆகியோர் இந்தப் படத்தில் அறிமுகமாகி பின்னாளில் உச்ச இடத்தை அடைந்தனர். குறிப்பாக தெலுங்கின் முக்கிய இசையமைப்பாளராக மாறினார் தமன்.
சமீபத்தில் தமன் தன்னுடைய ட்விட்டரில், “பாய்ஸ் டீம் 13 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் இணையவிருக்கிறோம். சீக்கிரத்தில் அதற்கான செய்தி வெளியாகும்” என்று ட்விட் செய்துள்ளார். இதன்படி அறிமுக இயக்குநர் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் சித்தார்த், நகுல் நடிக்கவிருக்கும் படத்தில் தமன் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.