எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! | AR.Murugadoss to direct SJ Surya soon

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (24/03/2016)

கடைசி தொடர்பு:14:52 (24/03/2016)

எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

தமிழில் பல ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, இன்னொரு ஹிட் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.அது வில்லன் கதாபாத்திரம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜயகாந்த்,சூர்யா,விஜய் என்று பல முன்னணி ஹீரோக்களுக்கு ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர்  ஏ.ஆர்.முருகதாஸ்.தற்போது அவர், முதல்முறையாக ரூ. 85 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார்.

இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழில் இறைவி,நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்