ஒரு சூப்பர்ஸ்டாரின் மகளாக இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? விளக்கும் ஐஸ்வர்யா

ரஜினிகாந்தின் மகள், தனுஷின் மனைவி,  “3” படத்தின் மூலம் இயக்குநர் என்று நமக்குத் தெரிந்த ஐஸ்வர்யா தனுஷ் இப்போது எழுத்தாளர். இவர் எழுத்தில் உருவாகிவரும் ஆங்கிலப் புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிடவிருக்கிறது.

இப்புத்தகத்திற்கு “ ஒரு ஆப்பிள் பெட்டி மீது நின்றுகொண்டு” என்று பெயரிட்டுள்ளார். தன்னுடைய நினைவுகளையும் எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவங்களின் துளிகளையும் பதிவு செய்திருக்கிறார். ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக வீட்டிலும், வெளியிலும் எம்மாதிரியான விஷயங்களுக்கு எப்படி முகங் கொடுக்கிறேன் என்பதை நெஞ்சை நெகிழச் செய்யும் வகையிலும், நேர்மையான முறையிலும் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் வெளியுலகத்தில் எங்கு சென்றாலும் தன்னைப் பின்தொடரும் கேமராக்களும், தன்னையே கண்காணிக்கும் ஏனையவர்களின் மத்தியிலும் தனக்கான சுய அடையாளத்தை எப்படி மீட்டு எடுத்தார் என்பதையும் இதல் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறும்போது,

“ ஒரு நாள் இதுபோன்றதொரு புத்தகத்தை எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டேன். என்னுடைய நினைவுகளில் இருந்த விசயங்களைப் பற்றி குறிப்புகளை எழுதினேன். என்னுடைய பசுமையான நினைவுகளை மீட்டெடுத்து வார்த்தைகளாய் சேகரித்தேன். என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய அப்பாவின் தாக்கம் எப்படியிருந்தது என்பது குறித்து ஏராளமான விசயங்கள் கிடைத்தது. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள், அவர் கடைபிடித்தவை, எனக்கு சொல்லிக் கொடுத்தவை என பலவற்றை இதில் தொகுத்திருக்கிறேன். இதனை ஒரு சிறிய கதையின் மூலமாக என்னுடைய வாழ்க்கையின் ஏற்றங்களையும், இறக்கங்களையும் என்னுடைய பார்வையில் சொல்லியிருக்கிறேன்".

இப்புத்தகம் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ல் வெளியாகவிருக்கிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!