சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறது பாண்டவர் அணி! - ராதாரவி

சென்னையில் செயல்படும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2,300 உறுப்பினர்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் சரத்குமார், ராதாரவி ஒரு அணியாகவும், நடிகர் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் 'பாண்டவர் அணி' என்ற பெயரிலும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்று பொறுப்பேற்றது.கட்டிடம் கட்டுவதில் சரத்குமார் அணி முறைகேடுகளைச் செய்துள்ளதாக, சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள்மீது நாசர் தலைமையிலான அணி புகார் கொடுத்திருப்பது தனிக்கதை! இப்போது, 'பாண்டவர் அணி'க்குள்ளேயே பிளவுகள் ஏற்பட்டுள்ளது.

பாண்டவர் அணியின் இந்தப் பிரச்னை குறித்து, முன்னாள் பொதுச்செயலாளரும், சரத்குமார் அணியில் இருந்தவருமான ராதாரவியிடம் பேசினோம். ''பாண்டவர் அணியில் இருக்கிறவங்க சின்னப்புள்ளத்தனமா செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க. பொன்வண்ணன் ராஜினாமா பண்ணிட்டாருனு நானும் கேள்விப்பட்டு விசாரிச்சேன். அவரோட ராஜினாமா கடிதத்தை வாங்கிக்காம, அவரைச் சமாதானப்படுத்திக்கிட்டு இருக்காராம் நாசர். விஷால், 'நடிகர் சங்கக் கட்டிடத்தை நல்லபடியா கட்டிமுடிப்பேன்னு சொல்லியிருக்கார். அது நல்லபடியா நடந்தா சந்தோஷம்!' என்று முடித்தார்.

- பொன்.விமலா -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!