விசாரணை க்கு தனுஷ் செட் ஆகவில்லை:வெற்றிமாறன்!

தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்திய விசாரணை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர் தனுஷ் 'செட்'  ஆகவில்லை என்றும் அதனால் நடிகர் தினேஷை நடிக்க வைத்தேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில்இன்று  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துகொண்டார்.அப்போது அவர் விசாரணை திரைப்படம் குறித்து பல்வேறு புதிய விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "விசாரணை' திரைப்படம் முழுக்க வேறு களம்.அதில் நடிக்க தனுஷ் செட் ஆகமாட்டார்.மேலும் அவர் தமிழில் பெரிய ஸ்டார். அவரின் ரசிகர்கள், தனுஷ்  அந்த வேடத்தில் நடிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அதனால் தினேஷ் நடித்தார்.உலக சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில்  தமிழ் சினிமா இன்னமும் உருவாகவில்லை.எங்களது விசாரணை திரைப்படம் பற்றி வெளிநாட்டு ரசிகர்கள் கூறும் போது படத்தில் ஓவர் ஆக்டிங் இருக்கிறது என்கிறார்கள்.அதனால்தான் கொரிய  திரைப்படங்கள் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.  சினிமா ரசிகர்களும் ரசிக்கும் வகையில் தமிழ் சினிமா மாறவேண்டும் " என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!