அடுத்தடுத்து மலையாள நடிகர்களின் மரணம்? சோகத்தில் திரையுலகம்!

மலையாள நடிகர்களான கலாபவன்மணியும், நடிகை கல்பனாவும் இறந்து போன சோகத்திலிருந்தே மீளாத திரையுலகத்திற்கு மீண்டும் அடுத்தடுத்து இருவரின் மரணம் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் நகைச்சுவை குணச்சித்திர வேடங்களில் நடித்தவரும், கேரளாவில் நாடக பிரசங்கம் செய்து வந்த கலைஞருமான வி.டி.ராஜப்பன் நேற்று காலமானார்.

இவர் சுமார் 100 படங்களில் நடித்துள்ளார். 32 கதாபிரசங்கங்கள் செய்துள்ளார்.. அதுமட்டுமல்ல 6000 மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். ராஜப்பன் நோயாலும், அதற்கு சிகிச்சை பெற வசதியின்றி வறுமையாலும் வாடிவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமாகியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து இப்போது நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மலையாள நடிகர் ஜிஷ்னு ராகவன் இன்று காலை கொச்சியில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 35. தமிழில் 'கள்ளப்படம்' என்ற திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக சின்னத்திரை மற்றும் மலையாள நடிகர்களின் தொடர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!