வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (25/03/2016)

கடைசி தொடர்பு:13:51 (25/03/2016)

முடிந்தால் பிரித்துப் பாருங்கள்? பகிரங்கமாகச் சவால் விட்ட விஷால்

கடந்த சில நாட்களாக நடிகர் சங்கத்தில் சில பிரச்னைகள் இருப்பதாக தினம் தினம் செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் இந்தப் பிரச்னைக்கு அ.தி.மு.க பிரமுகர் ஜே.கே.ரித்தீஷ் தான் காரணம் எனவும், பொன்வன்னன் தான் காரணம் என ஜே.கே.ரித்திஷ் தரப்பும் கூறி வர பிரச்னை பெரிதாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று ராதாரவி இவர்கள் செய்வதைப் பார்த்தால் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது எனக் கூறினார். இதனையடுத்து விஷால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்,

"நடிகர் சங்கத்தில் பிரிவா? உங்களால் சவால் விட முடியுமா? இந்தக் குழு சங்கத்தின் உறுப்பினர்களுக்காகவும், கட்டிடத்திற்காகவும் மட்டுமே வேலை செய்து வருகிறது". எனக் கூறியுள்ளார் விஷால். 

கடந்த இரண்டுநாட்களாக வந்து கொண்டிருந்த செய்திகளை முற்றிலுமாக நிராகரித்ததோடு சவால் விடுகிற மாதிரி ட்விட் செய்திருக்கிறார். இதற்கு பதில் சொல்லப்போவது யாரோ?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்