ஜெயலலிதா சினிமாவிழாக்களை நடத்தாதது ஏன்?

திரைப்படக் கலைஞர்களுக்கு சம்பளத்தை விட கைதட்டலும் அங்கீகாரமும்தான் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பார்கள். அதற்காகத்தான், மத்திய மாநில அரசுகள் திரைப்பட கலைஞர்களுக்கு விருது கொடுத்து பாராட்டுகிறது.

நமது பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் திரைப்பட நடிகர்களை உச்சிமுகர்ந்து கொண்டாடுகிறது. எழுத்தாளர், நட்சத்திரங்கள் மறைந்தால் அவர்கள் இறுதிச் சடங்குகளை அரசு மரியாதையுடன் நடத்துகிறது. ஆனால், தமிழகத்தில் திரைப்படத்துறையின் நிலை ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.

கடந்த ஆட்சியில், 'பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா' போன்று நாள் தவறாமல் விழாக்கள் களைகட்டும். திரைப்பட தொடக்கவிழா, கேசட் வெளியீட்டு விழா, திரைப்படம் வெளியீட்டு விழா, வெற்றி விழாக்களில் ரஜினி, கமல், வைரமுத்து என்று திரையுலகப் பட்டாளங்கள் கருணாநிதியை சுற்றி இருக்கும். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில், இதற்கு நேரெதிர் நிலைதான்!. திரைத்துறையினர் ஜெயலலிதாவை பார்ப்பார்கள். பெரும்பாலும் அவை, மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருக்கும்.

இந்த ஆட்சியில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது மட்டும்தான் ஒரே டுவிஸ்ட்! மற்றபடி, ஆண்டு தோறும் திரைக்கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டிய கலைமாமணி விருதுகள்கூட ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்-,

- கே.செந்தில்குமார்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!