”விஜய் ரசிகர்களின் மனநிலை இதுதான்” இந்தவார ஃப்ளாஷ்பேக் #WeeklyViral | Weekly Viral of Tele - Cine News

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (26/03/2016)

கடைசி தொடர்பு:12:42 (26/03/2016)

”விஜய் ரசிகர்களின் மனநிலை இதுதான்” இந்தவார ஃப்ளாஷ்பேக் #WeeklyViral

நமது வாழ்நாளில் இன்னொரு வாரமும் கடகடவென கடந்துவிட்டது. சினிமாவில் என்னென்ன நடந்துள்ளது எனத் தோண்டினால் இந்த வாரம் கொஞ்சம் கிளுகிளுப்பாகவே இருந்துள்ளது ,

ஒல்லிபெல்லியான நமீதா சென்னையில் நடந்த ஃபேஷன் ஷோவில் ரேம்ப் வாக் செல்ல சில்வர் உடையில் பலரின் தூக்கத்தையும் கெடுத்துள்ளார். அப்போ அடுத்த ரவுண்டா நமீ!

ஆனந்த் ஏற்கனவே சினிமாவில் பத்துக்கும் மேலான பாடல்கள் பாடியவர் , விஜய் டிவி மக்களை ஏமாற்றுகிறது என லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என சத்தியம் செய்ய இரவு சாப்பாட்டைக் கூட வேண்டாம் என நிராகரித்துவிட்டு சூப்பர் சிங்கர் பார்த்த ரசிகர்களை மீளா சோகத்துக்குள் தள்ளியது. எங்களை மோசம் செய்துவிட்டது விஜய் டிவி என்கிற பேச்சு பெரிய ரேஞ்சுக்கு பற்றிக்கொண்டது

எங்களுக்கு எந்த ரூலும் இல்லை என விஜய் டிவி சூப்பர் சிங்கர் குறித்து பதிலளிக்க, செல்லாது செல்லாது கோட்ட அழிங்க என இணையம் வைரலோ வைரல் ஆனது.  வின்னர் ஆனந்த், ரன்னர் ஃபரிதா என மாறி மாறி கருத்துகள் சொன்னபின்பு கொஞ்சம் ஓய்ந்துள்ளது.. சரி விடுங்க அடுத்த சீசன்ல பார்த்துக்கலாம்! 

ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மாவோ என விஜய் சொன்ன குட்டிக்கதை அஜித் ரசிகர்கள் கைகளில் கட்டித் தங்கமாகக் கிடைக்க இணையத்தில் மீம்ஸ்களால் மிரள வைத்ததும் விழித்துக்கொண்ட விஜய், எண்டுக் கார்டு போட்டு வருத்தம் சொல்லிவிட்டார் விஜய்.... தளபதிடா என மீண்டும் விஜய் ரசிகர்கள் காலரைத் தூக்கிக்கொண்டுள்ளனர். நல்லவேள சீனாவுல கண்டனம் தெரிவிக்கல!

பாட்டு எப்படி பாஸ் என்றால், முதல் ரெண்டு படங்கள் அளவுக்கு இல்லைன்னாலும் ஓகே தான். வீடியோவோட பார்த்தா இன்னும் செமத்தியா இருக்கும் என்கிறது “தெறி’ படத்தின் பாடல்கள் குறித்து இசை நேயர்களின் கருத்துகள்...ஆனால் விஜய் ரசிகர்கள் பதில் “தெறி பேபி” ரகம் தான்...

பாட்ட விடுங்க பார்த்தீங்களா டிரெய்லர சும்மா அதிருதுல்ல என விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதற்கேற்ப அதற்குள் அரை கோடிகளைக் கடந்து கம்பீரமாய் நிற்கிறது தெறி டிரெய்லர்... ஜித்து ஜில்லாடி கெத்து காட்டுது!

நாங்கதான் எங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாது, கட்டிடத்தைக் கட்டியே தீருவோம்னு இருந்த நடிகர் சங்க பாண்டவர் அணியில லைட்டா பிரச்னை உண்டாகியிருக்கு. ஒரு பக்கம் ஜே.கே.ரித்திஷ், இன்னொரு பக்கம் பொன்வன்னன் என குறை கூற இடையில் ராதாரவி சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு எனக் கமெண்ட் விட, விஷால் தோரணையாக முடிஞ்சா எங்கள பிரிச்சுப் பாருங்க என சவால் வைத்துள்ளார்... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

கலாபவன்மணி, கல்பனா இறப்புச் செய்தியே இன்னும் அடங்காத நிலையில் அதற்குள் மீண்டும் வி.டி.ராஜப்பன் மற்றும் ஜிஷ்ணு ராகவன் என இரண்டு மலையாள நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்களும் வாரக்கடைசியில் கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் மறைவும் இந்த வாரத்தில் தவிர்க்க முடியா சோகமாக இடம்பிடித்துள்ளது.

இந்த வருடமாவது மழை வருமா? பாணியில் எம்.எல்.ஏ சீட்டுகளுக்காக தேவுடு காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க நடிகர்கள் ... அம்மான்னா சும்மா இல்லடா! 

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் படத்தலைப்பு “தொடரி” என போஸ்டரும் வெளியாக என்ன தலைப்பு இது என்றால் தனுஷ் இருக்கார்ல வெச்சு செய்வாப்ல என்கிறார்கள் ரசிகக் கண்மணிகள், பிரபுசாலமன் படம்பா கண்டிப்பா எதுனா இருக்கும் என்கிறது சினிமா ரசிகர்களின் கண்ணோட்டம்... இமான் அண்ணே நல்ல பாட்டா போட்டுடுங்க காத்துருக்கோம்!

படமெல்லாம் முடிச்சாச்சு ரிலீஸ் தேதி அறிவிக்கப் போறோம் என குக்கூ புகழ் ராஜுமுருகன் தனது அடுத்த படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து படத்திற்கு ஜோக்கர் என அறிவிக்க போஸ்டரே அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது... #WhereIsMytoilet 

சன்னிலியோன், ஷகிலாவின் வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் என பகீர்ச் செய்தி ஊருக்குள் பரவ, உண்மையா என ஷகிலா வீட்டுக் கதவைத் தட்டினால் இன்னும் சரியாயிட்டு தெரியல, சன்னிலியோனா அல்லது பிபாஷாவா. ஆனால் என்டே வாழ்க்கை வரலாறு படமெங்கில் வல்லிய சந்தோஷம் என்கிறார் சேச்சி.... எஸ்டிடி’னா வரலாறுதான?

அவ்வளவும் இதுக்குத்தானே என கலகலவென ஒரு மூன்று படங்கள் வெளியாகிவிட்டன, தோழா, ஸீரோ, வாலிபராஜா... எது பெஸ்ட் ? என்றால் பேட்மேன் Vs சூப்பர்மேன் சூப்பர்பா என பல்ப் கொடுக்கிறது ஒரு கூட்டம். எனினும் வட்டாரத் தகவல்கள் படி தோழா நெகிழச் செய்கிறது என விமர்சனங்கள் வந்துவிழுகின்றன.

தோழா விமர்சனத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்:http://bit.ly/22K7OVU 

இந்தவாரம் நம்மள படப்பிடிப்புகளுக்கும், பரபரப்புகளுக்கும் ஆக்கிய சினிமா வைரல்கள் இவை தான்..

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்