இன்னும் நான்குநாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது - கபாலி இயக்குநர் தகவல் | Kabali Rajini Trend In twitter Now

வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (26/03/2016)

கடைசி தொடர்பு:16:07 (26/03/2016)

இன்னும் நான்குநாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது - கபாலி இயக்குநர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 'கபாலி' திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. போஸ்டர் வெளியாகி சில நிமிடங்களில் ட்விட்டர்,ஃபேஸ்புக் என்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கபாலி படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்கான வெளியீடு மற்றும் தற்பொழுதைய பணிகள் பற்றி இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளதாவது, “ இன்னும் 3 முதல் 4 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கிறது. தற்பொழுது எடிட்டிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே டப்பிங் பணிகளைத் துவங்க முடிவெடுத்துள்ளோம். டப்பிங் முடிந்ததும் டீஸர் அதைத் தொடர்ந்து டிரெய்லர் வெளியிட முடிவுசெய்துள்ளோம்.

ரஜினிசாரின் ஒத்துழைப்பால் தான் இவ்வளவு சீக்கிரமாகவே இப்படத்தை முடித்திருக்கிறோம். ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இப்படம் நிச்சயம் அமையும். மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் படம் வெளியிடும் வகையில் அதற்கான வேளைகளில் இறங்கியிருக்கிறோம்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே, ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்திருகிறார்கள். மேலும் கிஷோர், 'அட்டக்கத்தி' தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்