ஏ.ஆர்.ரஹ்மானை பின்னுக்குத் தள்ளினார் இளையராஜா | Illayaraja Defeat AR Rahman

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (28/03/2016)

கடைசி தொடர்பு:13:42 (28/03/2016)

ஏ.ஆர்.ரஹ்மானை பின்னுக்குத் தள்ளினார் இளையராஜா

இந்திய அரசு வெளியிட்ட, 63 வது தேசிய விருதுகள் பட்டியலில் தாரை தப்பட்டை படத்திற்கான சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது.

இது இளையராஜா பெறும் 5வது தேசிய விருதாகும். இதற்கு முன் இளையராஜா, 1983 சாகர சங்கமம் (தெலுங்கு), 1985 சிந்து பைரவி (தமிழ்), 1988 ருத்ர வீணை (தெலுங்கு), 2009 பழசி ராஜா (மலையாளம்) ஆகிய படங்களுக்காக நான்கு முறை விருது பெற்றிருந்தார்.

இளையராஜாவைப் போலவே ஏ.ஆர். ரஹ்மானும் இதுவரை 4 தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். ரோஜா, மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களே அவை.
 

இப்போது இளையராஜா 5 வது முறையாக தேசிய விருது பெற்று, விருது பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானை பின்னுக்குத் தள்ளி, முந்தியது இளையராஜாவின் ரசிகர்களை உற்சாகத்தில் திளைக்கச் செய்துள்ளது.

வாழ்த்துகள் இசைஞானி!....

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்