குஜராத் ஃபிலிம் ஃப்ரெண்ட்லி மாநிலமா? ஏன் இந்த திடீர் விருது | why Gujarat has selected as best film friendly state in national awards?

வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (28/03/2016)

கடைசி தொடர்பு:16:47 (28/03/2016)

குஜராத் ஃபிலிம் ஃப்ரெண்ட்லி மாநிலமா? ஏன் இந்த திடீர் விருது

63வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, பாகுபலி , விசாரணை, இளையராஜா, சமுத்திரக்கனி, மற்றும் எடிட்டர் கிஷோர் என தமிழ் சினிமாவுக்கு இந்த முறையும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த தேசிய விருதுகளின் பட்டியலில் முதல் முறையாக சினிமா நட்பு மாநிலம் என குஜராத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருது சேர்க்கப்பட்டதின் நோக்கம், சினிமா டூரிஸம் எனப்படும், வேற்று நாட்டு சினிமாக்காரர்கள் நம்மூரீல் வந்து படமெடுக்கும் வழக்கத்தை அதிகரிக்கவே இந்த விருது இவ்வருடம் முதல் கொடுக்கப்பட உள்ளது. எனினும் மோடி ஆட்சி செய்யும் வேளையில் சரியாக அவரது சொந்த மாநிலமான குஜராத்துக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.

கேரளா, மாநிலத்தை சிறப்பாக மென்ஷன் செய்திருப்பதை கொஞ்சம் ஏற்றுக்கொள்ளலாம். நமக்குத் தெரிந்து இயற்கையை அதிகம் அழிக்காமல் கேமராவிற்கு குளூமையான இடங்களைக் கொடுப்பது கேரளா தான். அதே சமயம் தன் இருப்பிடம் தேடிப் படம் எடுக்க வரும் குழுவை நேரில் சந்தித்து உற்சாகமூட்டும் வகையில் பாண்டிச்சேரி முதல்வரும், புதுச்ச்சேரியுமே தற்போதைக்கு இந்த விருதுக்கு சரியானவை என்ற கருத்தும் இருக்கிறது.

முதன்முறை அறிவிக்கப்படும் ஒரு விருது பிரதமர் மோடியின் மாநிலத்துக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால் இதில் கூடவா அரசியல் என்ற  கேள்வியே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை..

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்