வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (28/03/2016)

கடைசி தொடர்பு:17:46 (28/03/2016)

உதயநிதி ஸ்டாலின் செய்த சர்ச்சை - வைரலாகும் புகைப்படம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போல சேலையில் வைகோ இருப்பதை போன்ற படத்தையும், வைகோ போல வெள்ளை சட்டை கருப்பு துண்டோடு ஜெயலலிதா இருப்பதை போன்ற படத்தையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார் ஸ்டாலின் மகன் உதயநிதி. திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க திமுக ரூ.500 கோடி பேரம் பேசியதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மக்கள் நலக்கூட்டணியை அதிமுகவின் பி டீம் என திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திமுக வழக்கு தொடுத்துள்ளதற்கு பதிலளித்து பேசிய வைகோ, "சி.பி.ஐ. விசாரணையின் போது, சாஹித் பல்வாவுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே உள்ள உறவை சொல்லியதால், சாதிக் பாட்சா துாக்கில் தொங்கினார். எனவே, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் பின்னணியில் ஸ்டாலினுக்கு தொடர்பு உள்ளது' என பேசி மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதா போல சேலையில் வைகோ இருப்பதை போன்ற படத்தையும், வைகோ போல வெள்ளை சட்டை கருப்பு துண்டோடு ஜெயலலிதா இருப்பதை போன்ற படத்தையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார் . அண்ணே.. அதாண்ணே இது" என்ற தலைப்பில் வைகோவை விமர்சித்து இந்த படத்தை வெளியிட்டுள்ளார் உதயநிதி. ஸ்டாலின் மீது அடுத்தடுத்து புகார்களை வைகோ கூறி வரும் நிலையில், அதற்கு ஸ்டாலின் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இந்த சூழலில் இப்போது உதயநிதி, வைகோ விமர்சித்துள்ளார். இந்த மீம்ஸ் தப்போது வைரலாகப் பரவி வருகிறது. -ச.ஜெ.ரவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்