வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (29/03/2016)

கடைசி தொடர்பு:11:07 (29/03/2016)

மீண்டும் தமிழில் ஜாக்கி ஷெராப்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஜாக்கி ஷெராப் ஆரண்யகாண்டம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தின் அவர் ஏற்று நடித்த வித்தியாசமான பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.

பாலிவுட்டின் சென்சேஷனல் படமான ஜிஸ்ம் 3 படத்தில் ஜாக்கி செராப் நடிக்கிறார் என்ற செய்தியே இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார் ஜாக்கி.

சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கிருஷ்ணன், மற்றும் லாவண்யா திரிபதி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ”மாயவன்” படத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்க இருக்கிறார். வில்லனாக ஜாக்கி நடிக்க இருக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது.

ஆரண்யகாண்டம் வெளியாகி சரியாக ஐந்து வருடங்கள் ஆகிய நிலையில் மீண்டும் ஜாக்கியின் என்ட்ரீ சினிமா ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக வரவேற்புகளையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்கும். இந்தப் படத்தை சி.வி.குமாரே தயாரிக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்