தேசியவிருது தன் மதிப்பை இழந்துவிட்டது - கடுமையாகச் சாடும் பிசி ஸ்ரீராம்!

விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்த படமே ஐ. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் கடந்தவருடம் ஜனவரியில் வெளியானது.

இப்படத்திற்காக விக்ரம் உடல் இளைத்து, கூட்டி என கடும் சிரமப்பட்டு நடித்திருந்தார். விக்ரமின் உழைப்பு அந்தப் படத்தினை திரையில் கண்ட அனைவருக்குமே நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் நேற்று வழங்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் விக்ரமிற்கு ஒரு விருதுகூட கொடுக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கடும் அதிருப்தியை இணையத்தில் வெளிப்படுத்தி வந்தனர்.

இதற்கு நடுவே, இப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சமுகவலைதளத்தில் தன்னுடைய கருத்தை பதிவிட்டார், “ விக்ரமிற்கு விருது கிடைக்காததால் வருந்துகிறேன். தேசியவிருதுகள் பலநேரங்களில் அதன் மதிப்பை இழந்துவிடுகிறது. விக்ரம் எதையும் இழந்துவிடவில்லை, தேசியவிருது தான் தன் மதிப்பை இழந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!