அஜித்தின் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்கள்! | Ajith Next Movie Will stars June 9

வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (29/03/2016)

கடைசி தொடர்பு:13:02 (29/03/2016)

அஜித்தின் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்கள்!

அஜித் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியானது வேதாளம். வீரம் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்த இப்படமும் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது.  அஜித் ரசிகர்களின் சமீபத்திய கேள்வி அஜித்தின் அடுத்த படம் எப்போது? என்பது தான்.

அஜித்தின் அடுத்தபடத்தையும் சிவா தான் இயக்கவிருக்கிறார். சத்யஜோதிபிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்துவருகிறதாம்.

பொதுவாக அஜித் பட வெளியீடுகள் எதுவென்றாலும் வியாழக்கிழமை தான் நடைபெறும், வேதாளம் படத்தின் பாடல்களும் கூட வியாழக்கிழமை தான் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது. அதாவது, அஜித்தின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் 9ம் தேதி வியாழக்கிழமை தொடங்கவிருப்பதாக தெரிகிறது.

இப்படத்தில் அனிருத் இசை, வெற்றி ஒளிப்பதிவு செய்யவிருப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.  அஜித்திற்கு ஜோடி யாரென்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கும், அதற்கான விடை ஏப்ரல் 2ம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியென்றால்,  தீபாவளிக்கு அஜித் படம் வெளியாகுமோ?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்