இளையராஜாவுக்கு கங்கை அமரன் சிபாரிசு செய்தாரா? | Gangai Amaran answered for best music national award

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (29/03/2016)

கடைசி தொடர்பு:13:11 (29/03/2016)

இளையராஜாவுக்கு கங்கை அமரன் சிபாரிசு செய்தாரா?

இந்த முறை தேசிய விருதுகள் பல சர்ச்சைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது ஒரு பக்கம் பாகுபலி சிறந்த படமா , தொழில்நுட்ப ரீதியில் தானே படத்துக்கு விருது கொடுத்திருக்க வேண்டும் எனவும், இன்னொரு பக்கம் அதென்ன ஃபிலிம் ஃப்ரெண்ட்லி மாநிலம் விருது ,அதுவும் குஜராத்துக்கு, விக்ரமுக்கு ஏன் விருது இல்லை எனவும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் அடுத்த கட்டமாக இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது தாரை தப்பட்டை படத்துக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான் சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. ஏனெனெஇல், கங்கை அமரன் தேசிய விருது கமிட்டி உறுப்பினர் என்பதுதான்.

சர்ச்சை வந்ததால், தற்போது இதற்கு கங்கை அமரன் பதிலளித்துள்ளார்,

குடும்பமெல்லாம் இங்கே வேலைக்கே ஆகாது, அண்ணனா, தம்பியா, அப்பாவா என்பதெல்லாம் பார்க்க முடியாது, கண்ணை மூடிக்கொண்டு தான் தேர்வில் அமர வேண்டும்.நாங்கள் வெறும் தமிழுக்காக அங்கே அமரவில்லை.

எல்லா மொழிகளுக்கும் நாங்கள் பார்த்தாக வேண்டுமே தவிர நிஜமான கலைஞனாக எல்லா மொழிகளுக்குமிடையே பார்த்துதான் தேர்வு செய்திருக்கிறோம். இங்கே அண்ணன், தம்பி என எதையும் பார்க்கவில்லை  என முடித்துக்கொண்டார் கங்கை அமரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்