வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (29/03/2016)

கடைசி தொடர்பு:13:58 (29/03/2016)

சிம்பு மீண்டும் தவறான முடிவெடுக்கிறாரா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி இளைஞர்கள் மத்தியில் நல்ல படமாகவும், ட்ரெண்டியான படமாகவும் பார்க்கப்பட்டாலும் வெளியான போது விஜய்யின் துப்பாக்கி படத்துடன் போட்டி போட்டதால் படம் வசூலைக் குவிக்கத் தவறியது.

இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் மோத சிம்பு முடிவெடுத்துள்ளார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்பில் இருக்கும் படம் ’தெறி’. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெளியாகும் அதே நாளில் தற்போது நீண்ட நாள் கிடப்பில் இருக்கும் இது நம்ம ஆளு படத்தை சிம்பு ரிலீஸ் செய்யவிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

தெறி படத்துடன், இது நம்ம ஆளு படத்தை வெளியிடுவதாக படக்குழு முடிவுசெய்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. எனினும் சிம்புவுக்கும் விஜய்க்கும் இடையில் ஒரு நல்ல நட்பு உருவாகியுள்ள நிலையில் சிம்பு இப்படி செய்வாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அப்படி உண்மையில் வெளியிட்டால் சிம்பு மீண்டும் விஷப் பரீட்சையில் ஈடுபடுகிறார் என்றே அர்த்தம் என்று திரையுலகினர் சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்