கேப்டன் சென்டிமெண்ட்டா அட்வைஸ் பண்ணுவாரு, அப்பவே திருந்திடணும் இல்லேன்னா? | Villan character In Tamil Cinema

வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (29/03/2016)

கடைசி தொடர்பு:18:09 (29/03/2016)

கேப்டன் சென்டிமெண்ட்டா அட்வைஸ் பண்ணுவாரு, அப்பவே திருந்திடணும் இல்லேன்னா?

தமிழ் சினிமாவிற்கு ஹீரோக்கள் எந்த அளவு முக்கியமோ அதை விட வில்லன்கள் முக்கியம். ஹீரோவை ஹீரோவா காட்ட வில்லன்கள் கண்டிப்பா தேவை. தமிழ்ப் படங்களை பொருத்தவரை வில்லன்களை ஐந்து வகைகளாகப்  பிரிக்கலாம்.1, டெரர் வில்லன் 2,காமெடி மிக்ஸ் பண்ணுன டெரர் வில்லன் 3,ஃபாரின் வில்லன் 4, பாகிஸ்தான் வில்லன் 5, இதில் எந்த வகையிலும் சேராத ரஜினி வில்லன்.

ஃபர்ஸ்ட் டெரர் வில்லன்களை பார்ப்போம். இந்த கேட்டகரியில் முதலில் வருவது நம்பியார் தான் உள்ளங்கையை கஞ்சா கசக்குவது மாதிரி கசக்கி அடித்தொண்டையில் இருந்து டேய் மாயாண்டின்னு கூப்பிடுவார். இவருக்கு கத்திச் சண்டை, கம்புச் சண்டை, களரிச் சண்டைனு ஏகப்பட்ட வித்தைகள் தெரியும். இருந்தாலும் முதலில் மூணு அடி அடிக்க மட்டும் தான் எம்.ஜி.ஆர் இவருக்கு பெர்மிஷன் கொடுத்திருக்கார்.

டுத்த காலகட்டத்தில் என்ட்ரியானவர் ரகுவரன். ஓவர் கோட், ரவுண்டு தொப்பி, பாம் வைக்கிற சூட் கேஸ் இதுதான் இவர் ப்ராபர்ட்டி. தன்னுடைய பாம் தன்னைக் கொல்லும் என்கிற பழமொழிக்கு ஏற்ப அவர் வெச்ச பாம் அவரையே கொன்னுடும். இந்த வரிசையில் கடைசியா என்ட்ரியானவர் வித்யுத் ஜம்ப்வால் இவர் ரொம்ப பாவம் பாஸ் சாகும்போது கூட சஸ்பென்ஸ்சோடவே செத்துப்போனார்.

காமெடி மிக்ஸ் பண்ணுன வில்லன்கள் வரிசையில் ஆலப்பனா நான் உங்கள் அடிமைன்னு கண்ணை சிமிட்டி பேசும் அசோகனை மறக்க முடியுமா ? இவர் படங்களை கே டி.வியில் இப்போ பார்க்கும்போது சீரியஸ் சீனுக்கு கூட சிரிப்பு வருது. அடுத்து பிரகாஷ் ராஜ், தன லெட்சுமி என் சாமிடா அவளை தூக்கிட்டு போற தேருடா நான் தப்பு தப்புனு பேசும் மதுரை முத்துப்பாண்டியைப் இங்கே சொல்லித்தானே ஆகணும். ஐ லவ் யூடா செல்லம்னு கில்லியில் ரொமான்ஸ் மூடில் திரியும் அவர் அபியும் நானும் படத்தில் அப்படியே ஆப்போசிட்டா மாறி திரிஷாவுக்காக ஸ்கூல் அட்மிஷன் வாங்க அலெக்சாண்டர் குதிரை பெயரை மனப்பாடம் பண்ணிக்கிட்டிருப்பார். காமெடி வில்லன்களில் லேட்டஸ்ட் வரவு காளவாசல்ல மரக்கடை வெச்சிருக்கும் ஏழரை மூக்கன் சமுத்திரக்கனி தான். செல்லப்பட்டி பூசாரிகிட்ட இதுதான் என் பாட்டினு பொய் சத்தியம் செய்ற அளவுக்கு ரொம்ப ரொம்ப கெட்டவர்.

ஃபாரின் வில்லன்களை நம்ம ஆளுங்க வெச்சு செஞ்சிருக்காங்க குறிப்பா சிங்கம் 2 வில்லன் டேனிக்கு தமிழ் தெரியாதுங்கிற ஒரே காரணத்துக்காக ஆப்ரிக்கா குரங்குனு திட்டுவாரு சூர்யா, அடுத்து பேராண்மை ரோலாண்ட் கிக்கிங்கேர் வடிவேலு சொல்ற மாதிரி ஆளு பல்க்கா இருந்தாரு, அப்பேர்பட்டவரை சாதாரண பச்சிலை தடவுன கத்தியை வெச்சே கதம் கதம் பண்ணுவார் ஜெயம் ரவி, ஆறு படத்தில் பேமஸான வடிவேலு டயலாக் வயிறு வலினா மதுரைக்கு போ அங்கே வயித்திலே குத்துவாங்க எல்லாம் சரியாகிடும்னு அது மாதிரி பூலோகம் படத்தின் வில்லன் நேதன் ஜோன்ஸ் வயித்திலே குத்தி வின் பண்ணுவார் ஜெயம் ரவி. பெயரிலேயே ஜெயம் இருப்பதால் அந்த வெண்கல கிண்ணம் இவருக்குத்தான்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதுக்கு பெர்மனெண்டா 4 பேரை ஃபிக்ஸ் பண்ணி வெச்சிருக்காங்க. சோனு சூட், முகேஷ் ரிஷி, ராகுல் தேவ், இவங்க அடகு கடை சேட்டு மாதிரி தமிழை தப்புதப்பா பேசுவாங்க அப்பப்போ ஜிகாத்னு சொல்வாங்க, இவங்க பயப்படுற ஒரே விஷயம் இந்தியாவில் இருக்குதுனா அது கேப்டனும் அர்ஜுனும்தான். கேப்டன் முதலில் மேரே சுபுஹாணி மாசூக்கு ரகுமானினு சென்டிமெண்டா அட்வைஸ் பண்ணுவார் அப்போவே திருந்திடணும் இல்லேன்னா அடுத்து அவர் காலை வெச்சு என்ன செய்வாருனு நான் சொல்லித்தான் தெரியனுமா

இவங்கள்ல எந்த வகையிலும் சேராத ஒரு குரூப் இருக்குன்னா அது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட வில்லன்கள்தான். ரஜினி நடிச்ச பழைய கழுகு படத்தில் அவ்ளோ பெரிய பஸ்ஸையே ஒத்தை கையால தூக்கி நிறுத்தும் இரும்பு மனுஷன். பணக்காரன் படத்தில் கார்ஷெட் குடுமி வில்லன். குரு சிஷ்யன் க்ளைமேக்ஸ்ல குகைக்குள்ளே சிக்கன் தின்னுகிட்டே வரும் முரட்டு மீசை வில்லன். தர்மத்தின் தலைவன் ஏழடி பாம்பே வில்லன். இப்படி ஏகப்பட்ட பேர் இருக்காங்க இவங்களை ரஜினி எப்படி அடிப்பாருனு நினைக்கிறீங்க அவங்க தலைக்கு மேலே பறந்து ஷோல்டர்ல போய் நின்னு ஒத்தை காலில் பேலன்ஸ் பண்ணிக்கிட்டு இன்னொரு காலை வெச்சு அடிப்பார். ஏகப்பட்ட வில்லன்களைப் இப்படி போட்டு பொளந்திருக்கார் நம்ம சூப்பர் ஸ்டார்.

-ஜுல்ஃபி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்